சர்ச்சைகள் தொடர்ந்ததால் வைரமுத்தின் ONV விருது மறுபரிசீலனை செய்யப்படுகிறது...

மே 28ஆம் தேதி ONV Cultural Academy சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வைரமுத்தின் ONV விருது விருது குறித்து மறு பரிசீலனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

Featured image

Hits

வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? கனிமொழியிடம் சீறும் சின்மயி!!

“நான் உட்பட 16 பெண்கள் வைரமுத்து மீது அளித்த பாலியல் புகார் தொடர்பாகவும் தேவையான நடவடிக்கையை நீங்கள் எடுப்பீர்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் இந்த விவகாரத்தில் நடிகர் ராதாரவி அவருக்கு நெருக்கமானவர்களும் தலையிட்டு தன்னை எந்த பணியும் செய்யவிடாமல் தடுத்து வருவதாகவும் சின்மயி தெரிவித்துள்ளார்.”
@NEWS18 TAMILNADU

இந்தியாவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது விருது பெற்ற கேரளாவின் பிரபல இயலக்கியவாதியும் தேசிய விருது பெற்ற பாடலாசிரியருமான ஓ.என்.வி குறுப் பெயரில், அவர் இறப்புக்குப்பின் (2016), கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இலக்கியத்திற்காக சிறந்த பங்களிப்பை செய்து வருபவர்களுக்கு ஓ.என்.வி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று ஓஎன்வி குறுப்பின் பிறந்தநாளையொட்டி இந்த ஆண்டுக்கான விருதுக்கு கவிஞர் வைரமுத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
@Puthiyathalaimurai

இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாடகி சின்மயி, நடிகை பார்வதி உள்ளிட்டோர் இவ்விருதுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வைரமுத்துவுக்கு விருது வழங்குவது தொடர்பாக மறுபரிசீலனை செய்யவுள்ளதாக ஓ.என்.வி கலாச்சார மையம் நேற்று அறிவித்தது.
@Puthiyathalaimurai

கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கிறேன் என்று கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார். விருதுக்கான பரிசுத்தொகை ரூ.3 லட்சத்தை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்திடுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்…
@Dinakaran


Source & Full Coverage Link

Comments