சென்னை PSBB பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை | விரிவான தொகுப்பு

சென்னை பிஎஸ்பிபி பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை! ஆசிரியர், நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க சமூகவலத்தில் பலரும் கோரிக்கை

Featured image

Hits

சென்னை பி.எஸ்.பி.பி பள்ளியில் ஒரு ஆசிரியர் (வணிகவியல்) மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும், அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன்.

சென்னையில் இருக்கும் பி.எஸ். பி.பி. எனும் பிரபல பள்ளியில் வேலை செய்யும் ராஜகோபாலன் என்கிற ஆசிரியர் தன்னிடம் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்திருக்கிறது. அந்த பள்ளியில் படித்த மாணவிகள் சிலரும் இதை சமூக வலைதளங்களில் உறுதி செய்துள்ளனர். அந்த ஆசிரியர் குளித்துவிட்டு வெறும் துண்டுடன் ஆன்லைன் வகுப்பிற்கு வந்து மாணவிகள் முன்பு நின்ற புகைப்படம் வெளியாகியிருக்கிறது.
@SAMAYAM

பிரபல பள்ளியின் ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்த நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்க பல தடவை முயற்சி செய்தோம். ஆனால் அவர்கள் தரப்பிலிருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. பள்ளி நிர்வாகத்தின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப்பிறகு வெளியிட தயாராக இருக்கிறோம்.
@VIKATAN


Source & Full Coverage Link

Comments