இந்திய மருத்துவர்கள் சங்கம் பாபா ராம்தேவ் கருத்துக்கு கண்டனம்!

நவீன அலோபதி முட்டாள்தனமானது.. பாபா ராம்தேவ் கருத்துக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கண்டனம்!

Featured image

Hits

புதுடெல்லியில் நேற்று(21-05-2021) நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பதஞ்சலி நிறுவனத்தின் ராம்தேவ் “அலோபதி முட்டாள்தனமான மற்றும் தோல்வியடைந்த சிகிச்சை முறை. அலோபதி சிகிச்சை முறையால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்… இது சிகிச்சை அளிக்கப்படாதது அல்லது ஆக்சிஜன் கிடைக்காததால் உயிரிழந்தவர்களை விட அதிகம்.” என்று கூறினார்.

அறிவியலுக்குப் புறம்பாகவும், அலோபதி மருத்துவத்துக்கு எதிராகவும் பேசி, மக்களைத் தவறாக வழிநடத்தி, அறிவியல்ரீதியான மருந்துகளை அவமதிக்கும் யோகா குரு பாபா ராம்தேவைத் தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு (ஐஎம்ஏ) வலியுறுத்தியுள்ளது.

ராம்தேவின் கருத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில், இதுவரை நடந்தவரை போதும். ராம்தேவ் தனது சட்டவிரோதமான மருந்துகளை விற்பனை செய்வதற்காக தற்போதைய சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராம்தேவ் மீது பொருந்தொற்று நோய் சட்டம் 1897 -ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

யோகா குரு ராம்தேவ் அலோபதிக்கு எதிராக பேசுவதாக கூறப்படும் வீடியோவிற்கு #IMA செய்தி வெளியிட்டுள்ளது. அதில் “ ஒன்று ஐ.எம்.ஏ சுகாதார அமைச்சர் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு நவீன மருத்துவ வசதியைக் கலைக்க வேண்டும் அல்லது தொற்றுநோய் நோய்கள் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரவும்” என்று கோரியது.


Source & Full Coverage Link

Comments